வெட்டுண்ட சிறகுகள்....
விரிக்கும் ஒவ்வொரு முறையும்
வெட்டுப்பட்டுக் கொண்டே இருக்கின்றன
இன்றும், நேற்றும், முந்தயனாலும்,
அதற்கும் முன்பும்,.....................
ரணங்கள் தழும்பாய் ஆகும் முன்
மீண்டும் மீண்டும், ..... மீண்டும் மீண்டும்........
ஆயினும் நெருப்பிலிட்ட பீனிக்சாய்
வளர்ந்து கொண்டே இருக்கும்
என் சிறகுகள்.....
நேற்றும், இன்றும், நாளையும்,
நாளைய மறுதினமும்...........
என்றாகிலும் விண்ணைத் தொடும் உறுதியுடன்!
--பிரியா